ஃபிஃபா தலைமைக்கான போட்டியிலிருந்து விலகல்
உலக கால்பந்தாட்ட சம்மேளனம் ஃபிஃபாவின் தலைவர் செப் பிளேட்டரை எதிர்த்து அடுத்த புதன்கிழமை நடக்கவுள்ள தேர்தலில் போட்டிக்கு நின்ற ஒரு ஒரு நபரான கத்தார் நாட்டைச் சேர்ந்த மொஹமது பின் ஹமாம் போட்டியிலிருந்து விலகியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக இவர் ஆட்களுக்கு கையூட்டு வழங்கியதாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஃபிஃபாவின் பேர் கறை படியக்கூடாது என்று தான் போட்டியில் இருந்து விலகியதாக மொஹமது பின் ஹமாம் கூறியுள்ளார்.
ஃபிஃபாவின் நேர்மைக் கமிஷன் இவரையும், தலைவர் செப் பிளேட்டரையும் விசாரித்து வருகிறது.
தனனை போட்டியிலிருந்து விலக்குவதற்கான சதியே இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மொஹமது பின் ஹமாம் கூறுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply