நாட்டை இராணுவ மயமாக்கும் முயற்சியில் அரசாங்கம் : அத்தநாயக்க
அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் அனைத்தும் நாட்டை இராணுவ மயமாக்கும் நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதுடன் பாடசாலை அதிபர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளை உள்ளடக்கி நகர கூட்டுத்தாபனம் அமைக்கும் முயற்சி, அரச திணைக்களங்கள் பலவற்றின் உயர் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி, பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ தøலமைத்துவ பயிற்சிக்கான முஸ்தீபு என்பன ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பவர்களை பழிவாங்குவதும் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கு சூட்சுமமாக நடவடிக்கை எடுப்பதும் அரசாங்கத்தின் செயற்பாடாக மாறியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ள பகுதிகளை இனங்கண்டு அதனை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மிகவும் தந்திரொபயமாக அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே கொழும்பு மாநரகசபை அடங்கலாக 5 உள்ளூராட்சி சபைகளை உள்ளடக்கி நகர கூட்டுத்தாபனம் அமைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த சபைகளை தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருப்பதற்காகவே அரசாங்கம் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
அரச திணைக்களஙக்ள் பலவற்றின் உயர் பதவிளுக்கு இராணுவ அதிகாரிகளை அரசாங்கம் நியமித்து வருகின்றது. பல்கலைக்கழகங்களில் நிவர்த்தி செய்யப்படாத எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றபோதிலும் எவ்வித அறிவித்ல்களோ கலந்துரையாடல்களோ இன்றி இராணுவ தலைமைத்து பயிற்சியினை பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்றது. இந்த இராணுவத் தலைமைத்துவ பயிற்சி குறித்து புத்திஜீவிகளுடனோ அல்லது பாராளுமன்றத்திலோ விவாதிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதியைக்கூட பெறவில்லை.
அரசாங்கம் எதற்காக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றது என்பதே தற்போதைய கேள்வியாகவுள்ளது. தலைவர்களும் சமூக அமைப்புக்களின் பிரதநிதிகளும் அரசாங்கத்திடம் கேள்விமேல் கேள்வியெழுப்பியபோதிலும் அதற்கான உரிய பதிலை அரசாங்கம் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு தனது சர்வாதிகார செயற்பாடுகளை படிப்படியாக அரங்கேற்றி வந்த அரசாங்ம் தற்போது பாடசாலை அதிபர்களுக்கும் இராணுவ தøலமைத்துவ பயிற்சியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பாடசாலை அதிபர்களுக்கு பாடசாலை முகாமைத்தச பயிற்சி நெறிகள் உட்பட பல்வேறு நிர்வாக பயிற்சி நெறிகள் நடைமுறையில் இருக்கின்றன. இந்தநிலையில் அரசாங்கம் இவர்களுக்கு இராணுவ தலைøமத்துவ பயிற்சியை வழங்குவதற்கு முயற்சிக்கின்றது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டை இராணுவமயப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைளாகவே கருதவேண்டியுள்ளது. எனவே அரசõங்கத்தின் இத்தகயை செயற்பாடுகளை தடுப்பதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply