பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்து
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் ஐ.நா. நிபுணர் குழுவினால் முன்கொண்டு வரப்பட்ட ஆவணங்கள் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கவனத்தில் எடுக்கவேண்டும் அத்துடன் இலங்கை பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்க தூதுவர் எலின் சம்பர்லைய்ன் டொனாகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மோதல்களின் போது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்களை எந்தத் தரப்பு செய்தது என்று கவனத்தில் கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் உடனடியாக நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும்.
இத் தீவிர துஷ்பிரயோகங்கள் குறித்து இந்த பேரவை கருத்திற் கொள்ள வேண்டும். யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் ஆராய வேண்டும்.
பாகிஸ்தான் கருத்து
இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் தூதுவர்சமீர் அக்ரம் தேசிய நகர்வுகள் மூலம் இலங்கையில் அமைதியை வென்றெடுப்பதற்கு அனைத்துலக சமூகமும் உதவ வேண்டும்.
இதேவேளை ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கை இரண்டாம் தரப்பின் தகவல்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ஆரம்பநிலை அறிக்கை என்றும் பகுப்பாய்வு செய்யப்படாததும் என்றார்.
இதேவேளை இந்த கூட்டத்தொடர்பில் ஆபிரிக்க மற்றும் இஸ்லாமிய நாடுகள் இலங்கை யுத்தம் தொடர்பான விவாதத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply