பயங்கரவாத ஒழிப்பு – இலங்கையின் அனுபவம் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு
‘பயங்கரவாத ஒழிப்பு- இலங்கையின் அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. கலதாரி ஹோட்டலில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத ஒழிப்பு- இலங்கை யின் அனுபவம் என்பன தொடர்பான விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
மிகவும் பிரமாண்டமான முறையில் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில் 42 நாடுகளின் பாதுகாப்பு, இராணுவ உயர் அதிகாரிகள், தூதரக பாதுகாப்பு இணைப்பாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட உயர் அதிகாரி கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இன்றைய முதல் நாள் கருத்தரங்கு மூன்று பிரதான அமர்வு களாக பல்வேறு தலைப்புகளில் நடைபெற வுள்ளன. ‘பயங்கரவாத முறியடிப்புக் கான சவால்கள் மற்றும் வாய் ப்புக்கள்’ என்ற தலைப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசி ரியர் ஜீ.எல். பீரிஸ், வெளி நாட்டி லிருந்து அழைக்கப்பட்டுள்ள டொக்டர் அஹமட் எஸ். ஹரீம் ஆகியோர் முதல் அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த தலைமையில் நடைபெறவுள்ள இர ண்டாவது அமர்வில் “எல்.ரீ.ரீ.ஈயின் பரிணாம வளர்ச்சி மற்றும் சர்வதேச வலைப்பின்னல்’ என்ற தலைப்பில் மேஜர் ஜெனரல் ஐ.ஐ.கே.ஜி. ஹெந்த வித்தாரன, லெப்டினன்ட் கேர்ணல் ரி.எஸ். சாலி ஆகியோர் விசேட உரை நிகழ்த்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் சிரேஷ்ட உயர் அதிகாரிகள் தலை மையில் வெவ்வேறு தலைப்புக்களில் குழுவாக கலந்துரையாடல்கள் இடம் பெறவுள்ளன.
மூன்றாவது அமர்வில் ‘பயங்கர வாத முறியடிப்பு தொடர் பான கண்ணோட்டம்’ என்ற தலைப் பில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ள டொக்டர் ரொஹான் குண ரட்ன விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
சுமார் 300 பேர் கலந்து கொள்ள வுள்ள இந்த உயர் மட்ட கருத்தரங் கில் பெருந் தொகையான உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு துறை சார்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ள இந்த கருத்தரங்கு நேரடி ஒலி, ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply