“வீடியோ போலி, விசாரணை தேவையில்லை”

போர்க்குற்றம் தொடர்பில் பிரிட்டனின் சேனல் 4ல் காண்பிக்கப்பட்ட வீடியோ போலியானது என்று தாங்கள் ஏற்கெனவே நிரூபித்துவிட்டதால், அது தொடர்பில் புதிய விசாரணைகள் தேவையில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் சிறார்கள கொன்றனர். கர்ப்பிணிகளை, நிராயுத பாணிகளை ஆயிரக்கணக்கில் கொன்றுள்ளனர். அதையெல்லாம் ஐ.நா. விசாரணையாளர்கள் குறிப்பிடவில்லை.
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான முக்கிய ஆவணமாக கருதப்படும் சேனல் 4ல் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் உண்மையானவை என்றும், அது குறித்து இலங்கை அரசு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் அறிக்கை அளித்திருந்தார்.

ஆனால் இந்த பரிந்துரையை இலங்கை அரசு ஏற்காது என்றும் புதிய விசாரணைகள் நடத்தப்படாது என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையத்தின் இயக்குனர் டாக்டர் லக்ஷ்மண் ஹூலுகெல்ல தெரிவித்துள்ளார்.

ஆனால் ஐ.நா.வால் வெளியிப்பட்ட 400க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட அறிக்கையில், விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ஹுலுகெல்ல குற்றம்சாட்டினார்.

ஐ.நா. கலந்துரையாடலில் இலங்கையின் பதிலறிக்கை

இதற்கிடையே இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ், இந்த வீடியோ ஆதாரங்களை பரிசீலித்த நிபுணர்கள் சிலரது தகைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தவிர இந்த அறிக்கையைச் சமர்ப்பித்த ஐ.நா. நிபுணர்களின் ஆய்வுகள் பக்கச்சார்புடைவையாக அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் நடந்துவருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில், சட்டத்துக்கு புறம்பான மற்றும் ஒட்டு மொத்தக் கொலைகள் குறித்த சிறப்பு தூதரின் அறிக்கை குறித்த கலந்துரையாடலில் மொஹான் பீரிஸ் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார்.

இந்த வீடியோ ஆதாரங்களை சரி பார்ப்பதற்காக தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்களும் சரியாக இல்லை என்று அவர் அதில் குறை கூறியுள்ளார்.

ஆனாலும் ஐ.நா. சிறப்புத்தூதருடன் எதிர்காலத்தில் ஒத்துழைக்க இலங்கை தயாராக இருப்பதாகவும் மொஹான் பீரிஸ் அவர்கள் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply