ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டிக்கின்றேன்: பொன்சேகா
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் சேவையாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் இதற்கான பொறுப்பை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே ஏற்கவேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணையை அவதானித்து விட்டு நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
அதற்கான பொறுப்பையும் குற்றச்சாட்டையும் சாதாரண பொலிஸார் மீது திணித்துவிடாமல் முழுப்பொறுப்பையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே ஏற்று சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply