ஜெர்மனியில் 15 பேரை பலிகொண்ட வெள்ளரிக்காய் நோய்

ஜெர்மனி நாட்டில் வெள்ளரிக்காய் சாப்பிட்ட சிலருக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டது. அதில் 15 பேர் உயிரிழந்தனர்.இந்த வெள்ளரிக்காய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். வெள்ளரிக்காயில் இ.கோலி என்ற பாக்டீரியா இருந்ததாகவும், அதனால் தான் அதை சாப்பிட்டதால் மக்கள் இறந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளரிக்காய் தொற்றுநோய் பக்கத்து நாடான சுவீடனிலும் பரவியது. சுவீடனில் உள்ள போரஸ் நகரில் இந்த நோய் தாக்கி 50 வயது பெண் ஒருவர் இறந்து உள்ளார். 70 வயது பெண் ஒருவர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. நோய் மேலும் பரவாமல் தடுக்க டாக்டர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.நோய்க்கு காரணமான வெள்ளரிக்காய் ஸ்பெயின் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது.

இதனால் ஜெர்மனி நாடு ஸ்பெயினிடம் நஷ்டஈடு கேட்டிருக்கிறது. இ.கோலி பாக்டீரியா பரவி வருவதால் ஸ்பெயின், ஜெர்மனி நாட்டில் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்ய ரஷ்யா தடை விதித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply