அமைச்சரவையில் திடீர் மாற்றம் ஊடகத்துறை ஜனாதிபதியின் வசம்
அமைச்சரவையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றம் செய்துள்ளார். இதற்கு இணங்க முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அனுர பிரியதர்சன யாப்பாவும் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக சரத் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊடகத் துறை அமைச்சர்களாக இதுவரை அனுர பிரியதர்சன யாப்பா பதவி வகித்து வந்தார். அதேபோல் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சரத் அமுனுகம பதவிவிகித்தார்.
பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த கருஜெயசூரிய அரசாங்கத்திலிருந்து விலகி ஐக்கிய தேசியக்கடசியில் இணைந்து கொண்டிருந்ததையடுத்து இந்த அமைச்சுப்பதவி வெற்றிடமாக இருந்தது. இதற்கே சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடகத்துறை அமைச்சராக அனுர பிரியதர்ன யாப்பாவும் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தனவும் பதவி வகித்துவந்தனர். தற்போது அனுர பிரியதர்ன யாப்பா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, ஊடகத்துறை அமைச்சினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply