புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் தாம் கோரிக்கை விடுத்ததாக, பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சாதாரண போராளிகளைப் போன்றே சிரேஸ்ட உறுப்பினர்களையும் விடுலை செய்ய முடியுமா என கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிதானமான திட்டமிடலின் மூலம் பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள முடியும் என்பது இலங்கை யுத்தத்தின் மூலம் புலனாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் இராணுவத்தினர் தகவல் மையமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென அவர் யோசனை முன்வைத்துள்ளார். இதன் மூலம் உலக சமூகத்தில் நிலவி வரும் முரண்பாடுகளை களைய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத்தின் மூலம் வேறு எந்தவொரு நாடும் இழக்காத அளவிற்கு இலங்கையில் புத்திஜீவிகளும் அறிஞர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்காக அளப்பரிய தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் மேற்கொண்ட அனைவரையும் நினைவு கூர்வது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply