நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அதிருப்தி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நவனீதம்பிள்ளை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை விவகாரங்களில் ஒரு விதமாகவும், பஹ்ரெய்ன் விவகாரத்தில் மற்றொரு விதமாகவும் நவனீதம்பிள்ளை செயற்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உறுப்பு நாடுகளின் உள்விவகாரப் பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுகுமுறை தொடர்பில் சர்ச்சை நிலைமை எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை வெளியிட்ட நவனீதம்பி;ள்ளை, பஹ்ரெய்ன் விவகாரத்தில் நெகிழ்வுப் பங்கான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பஹ்ரெய்ன் தொடர்பில் பிழையான தகவல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றதாக நவனீதம்பிள்ளை அண்மையில், அந்நாட்டின் சமூக அபிவிருத்தி அமைச்சர் பாதீமா பின் மொஹமட் அல் பலூஷியிடம் தெரிவித்துள்ளார்.
பஹ்ரேய்ன் விவகாரம் தொடர்பில் நம்பகமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இலங்கை விவகாரத்தில் நம்பகமான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply