அணுசக்தி நிலையங்கள் ஜெர்மனியில் மூட அனுமதி
ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்களை மூடும் மசோதாவுக்கு, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால், புகுஷிமா அணுமின் நிலையம் சேதமடைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது. இதனால், தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களை மூட, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முடிவு செய்தார். இதற்கான மசோதாவுக்கு, ஜெர்மன் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
ஜெர்மனியில் ஏற்கனவே ஏழு பழமையான அணு மின் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. சமீபத்தில் ஒரு அணுமின் நிலையம் தொழில்நுட்பக் கோளாறால் மூடப்பட்டது. 2022ம் ஆண்டுக்குள் ஒன்பது அணுமின் நிலையங்களையும் மூடி விடுவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியதாக, ஜெர்மன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நார்பர்ட் ராட்ஜன் தெரிவித்துள்ளார்.வரும் 2030ம் ஆண்டு வரை 17 அணு உலைகள் பயன்பாட்டில் இருக்கும். அணு உலைகள் மூடப்படுவதால் ஏற்படும் மின் பற்றாக்குறையைப் போக்க, நிலக்கரி, எரிவாயு மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை அதிகரிக்க ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply