அரசாங்கம் கே.பி.யை எந்தச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கின்றது?: ஐ.தே.க

யுத்த வெற்றியாளரான சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ள அரசாங்கம் சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் நபரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை எந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாத்து வருகிறதென ஐ.தே.கட்சி எம்.பி.யான ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று புதன்கிழமை சபையில் கேள்வி எழுப்பினார். நாட்டில் அவசரகாலச்சட்டம் அமுலில் உள்ள நிலையில் கே.பி.யை எவ்வாறு பாதுகாக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்நது உரையாற்றுகையில், அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிக்கும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் ஒருவர்.

ஆனால் இன்று எமது நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் போதும் கே.பி. க்கு வசதிகளை வழங்கி அரசாங்கம் பாதுகாத்து வருகிறது. இந்த நாட்டை அழிப்பதற்கு பங்களிப்பை வழங்கிய கே.பி.யை பாதுகாக்கும் அரசாங்கம், பயங்கரவாதத்தை ஒழித்த சரத் பொன்சேகா இன்று அரைக்காற்சட்டையுடன் சிறைவாசம் அனுபவிக்கின்றார். அவர் செய்த தவறு என்ன?

ஆனால் சர்வதேச பொலிஸõர் தேடும் கே.பி. அரச அனுசரணையுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறார். இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் நாட்டில் அவசரகாலச்சட்டம் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சுதந்திரமாக வாழும் உரிமை இருக்வேண்டுமென்று ஜனாதிபதி கூறுகிறார். இவ்வாறான நிலைமையில் அவரது அரசாங்கத்தின் சில பிரிவுகளில் வேறு சில ஆட்சியதிகõரங்கள் நடைபெறுகின்றன.

காலி, களனி, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் அமைச்சர்களது ஆட்சி நடைபெறுகிறது. கட்டுநாயக்கவில் இடம்பெற்ற சம்பவம் இம்மாதிரியான சம்பவம் தானா என்ற கேள்வி எழுகிறது. அதேவேளை தனியõருக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு நாம் எதிர்ப்பல்ல.

எனினும் அரசு தற்போது கொண்டு வரப்படவுள்ள தனியார் ஓய்வூதிய சட்ட மூலத்தையே எதிர்க்கின்றோம். ஓய்வு பெறும்போது வாழக் கூடிய விதத்தில் சட்ட மூலமொன்றை கொண்டு வந்தால் நாம் அதற்கு ஆதரவளிப்போம்.

சகல அரசியல் கட்சிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்தச் சட்ட மூலம் கொணடு வரப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தியதை அரசு ஒருவித பொருட்டாகவும் கவனத்தில் கொள்ளவில்லை.

அன்று அவ்வாறு பேச்சுவார்த்தைகளை நடத்தி மேற்கொண்டிருந்தால் இன்று ஒரு இளைஞனின் உயிர் பலியாகி இருக்காது.

அது மடடுமல்லாது, இன்னும் நிறையப் பேர் இச் சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் ஏதேச்சதிகாரம் காரணமாகத்தான் இவை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.

அதற்காகத்தான் அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கூறுகிறோம் என்றும் ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply