அரசு – தமிழ் கட்சிகள் பேச்சு மூலம் விரைவில் அரசியல் தீர்வு சாத்தியம்; இந்திய உயர்மட்டக் குழு நம்பிக்கை
இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்படும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்மட்டக் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதியை நேற்றுக் காலை சந்தித்த பின்னர் கொழும்பிலுள்ள இந்திய ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்த நம்பிக்கையை வெளியிட்டிருந்தனர்.
பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் பிரச் சினைத் தீர்வொன்று விரைவில் முன்வைக்கப் படவேண்டும் எனத் தெரிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் தமது இலங்கை விஜயத்தின் போது ஆராயப் பட்டதாகக் கூறினார்.
இலங்கை வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி இலங்கை ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்தியப் பிரதமரின் விஜயம் குறித்த திகதிகள் எதுவும் நிச்சயிக்கப்பட வில்லை என்றும் மேனன் குறிப்பிட்டார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் நிருபமாராவ், இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகிய மூவர் அடங்கிய குழுவினர் தமது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அரசாங்கத்துடன் நடை பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு விளக்கமளித்ததாகக் குறிப்பிட்ட சிவ்சங்கர் மேனன், மீள்குடி யேற்றம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப் பட்டுள்ளபோதும், இவற்றில் இன்னும் பல செய்துமுடிக்கப்பட வேண்டியிருப்பதாகக் கூறினார்.
இலங்கைக்கு எதிராக பொரு ளாதாரத் தடைவிதிக்கப்பட வேண்டுமென இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழக அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் தொடர்பில் தமது இந்திய விஜயத்தின் போது எதுவும் கலந்துரையாடப்படவில்லையென இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்த மேனன், மனித உரிமை விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டி ருப்பதால் இவ்விடயம் பற்றியும் தாம் கலந்துரையாடவில்லை யெனக் கூறியிருந்தார்.
அதேநேரம், இந்திய அரசாங் கத்தால் கட்டப்பட்டுவரும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பாக இந்திய வெளிவிவ கார செயலாளர் நிருபமா ராவ் இந்திய ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply