கிளிநொச்சி முன்னரங்கப் பகுதியில் கடும் மோதல்கள்
கிளிநொச்சி யுத்தகளத்தில் கடந்த 48 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான மோதல்கள் நடைபெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 57வது படைப்பிரிவு முன்நகர்வுகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரணைமடு, மணியங்குளம் மற்றும் பல்லவராயன்கட்டு ஆகிய பகுதிகளில் 57வது படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடன் பல்வேறு மோதல்களில் ஈடுபட்டதாகவும், கிளிநொச்சி தெற்கு பணிக்கன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
572வது பிரிகேடியர் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் அக்கராயன் குளம் வடக்குப் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டளவு தாக்குதலில் ஈடுபட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
ஏ௩2 வீதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது 583வது படைப் பிரிவினர் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், பல்லவராயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, வன்னி மோதல்களில் இராணுவத்தினருக்கு ஏற்படும் உண்மையான இழப்புக்கள் குறித்து கொழும்பு சரியான தகவல்களை வெளியிடுவதில்லையென விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினர் முன்னேறுவதற்கு எடுத்த முயற்சிகளை விடுதலைப் புலிகள் முறியடித்திருப்பதாகத் தெரிவிக்கும் அந்த இணையத்தளம், இந்த முறியடிப்புத் தாக்குதல்களில் பாதுகாப்புத் தரப்பிற்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதுஇவ்விதமிருக்க, தற்பொழுது வன்னியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இராணுவ நடவடிக்கைகள் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply