ஐக்கிய இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வையே எதிர்பார்க்கிறோம்
ஐக்கிய இலங்கைக்குள் சாத்தியமான அளவுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்ப்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வன்முறையற்ற நிலைமையானது அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் நாட்டிற்கும் சகல மக்களுக்கும் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையின் கொழும்பிலுள்ள நிருபர் சம்பந்தனுடன் அண்மையில் உரையாடியுள்ளார். இது தொடர்பாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது;
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் நடத்துவது இது தான் முதல் தடவையல்ல. ஆனால், தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இறுதியானதாக அமைய வேண்டுமென்பது பலரினது எதிர்பார்ப்பாகவும் பிரார்த்தனையாகவும் உள்ளது. அல்லது ஆகக் குறைந்தது முடிவின் ஆரம்பமாகவாவது இருக்க வேண்டுமென்பது பலரின் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையும் ஆகும்.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் 6 சுற்றுப்பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆயினும் அவை அதிகளவு முன்னேற்றகரம் இல்லாதவையாகவே உள்ளது. கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்பாக இரு தரப்புமே அதிகளவுக்கு வெளிப்படுத்தியிருக்கவில்லை.
இந்த விடயத்தில்கு சம்பந்தப்பட்டவர்கள் தீர்வு காண்பது வரலாற்றுபூர்வமான வாய்ப்பாக இருப்பதாக தமிழ் அரசியலின் மூத்த தலைவரான இராஜவரோதயம் சம்பந்தன் கூறிவிட்டு கொடுப்புக்குள் சிரித்தார்.
தற்போது தோல்விகண்டுள்ள தமிழ்ப் புலிகளுடன் அவரின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிணைப்புகளைக் கொண்டிருந்ததாக இலங்கையிலுள்ள பலர் விமர்சிக்கின்றனர். ஆனால், சிறுபான்மையினரின் அரசியலில் பிரதான கதாபாத்திரங்களில் ஒருவராக அவர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்.
அண்மையில் கடலுக்கு சமீபமாக இருந்த கட்டிடத்தில் அமைந்துள்ள அவரின் அலுவலக அறையில் ஜாக்கிரதையாக மப்பும் மந்தாரமுமான பிற்பகல் வேளையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். பேச்சுவார்த்தைகள் பற்றி வெளிப்படுத்துவதில் அதிகளவு கவனத்துடன் சம்பந்தன் இருந்தார். ஆனால், அவரும் அவரின் சகாக்களும் அரசாங்கத்திடம் எழுப்பிய கவலைகள் அக்கறைகள் தொடர்பாக பகிர்ந்துகொள்வதற்கு விருப்பமானவராகக் காணப்பட்டார்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு என்பனவற்றில் அதிகளவு வேறுபாடுகள் இல்லாமல் இருப்பது ஒருவிடயமாக இருந்தது. தடுத்து வைக்கப்பட்டிருப்போரை சென்று பார்வையிட முடியாமல் இருப்பது மற்றொரு விடயமாகும். 8-10 வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியாக சுமார் 800 புலி சந்தேக நபர்களும் ஆதரவாளர்களும் இருக்கின்றனர். அத்துடன், நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை குடும்பத்தினர் சென்று பார்வையிட முடியாமல் உள்ளது. “மகன்மார், கணவன்மார், சகோதரர்கள் யுத்தத்தின் இறுதியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதன் பின் பார்க்க முடியவில்லை அவர்களின் விபரங்களும் அறிவிக்கப்படவில்லை’ என்று சம்பந்தன் கூறினார்.
பின்னர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் ஆகியோரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழு சந்தித்திருந்தது. தடுத்து வைக்கப்பட்டிருப்போர் விவகாரம் தொடர்பாக மட்டுமன்றி வட, கிழக்குப் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவது மற்றும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுவதாகத் தென்படுவது போன்ற விவகாரங்களையும் எழுப்பியிருந்தனர்.
ஐக்கிய இலங்கைக்குள் சாத்தியமானளவுக்கு அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கலை நாம் எதிர்பார்க்கின்றோம். வன்முறையற்ற நிலைமையானது எமக்கு இந்த சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது இதன் மூலம் நாட்டிற்கும் சகல மக்களுக்கும் பயனைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று சம்பந்தன் கூறினார்.
தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் காணிபிராந்தியங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க தயங்குவது சச்சரவுக்கான விவகாரமாக உள்ளது. இந்தத் தடவையும் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை இந்த விவகாரமானது தடம்புரளச் செய்யக்கூடியதாக உள்ளது.
“இந்தியாவில் காணி, பொலிஸ் அதிகாரங்களை யார் கொண்டுள்ளார்கள்?’ என்று சம்பந்தன் கேட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply