பான் கீ மூன் ஐந்து ஆண்டுகளுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் நீடிப்பார்

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பான் கீ மூன் ஏகமனதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி தென் கொரிய ராஜதந்திரியான பான் கீ மூன் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக நீடிப்பார்.
192 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பான் கீ மூனை இரண்டாம் தவணைக்காக தெரிவு செய்யவுள்ளது.
67 வயதான பான் கீ மூனின், இரண்டாம் தவணைக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தென் கொரியாவின் வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூனை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என லத்தீன் அமெரிக்க நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுச் செயலாளர் பதவிக்காக வேறும் நாடுகள் வேட்பாளர்களை நியமிக்காத காரணத்தினால் பான் கீ மூன், ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply