பணமோசடி செய்த இந்திய பிரஜை கைது

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷவின் உதவியுடன்  7.5 கோடி ரூபா வங்கி கடனை பெற்றுத் தருவதாக கூறி, புறக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழ் வர்த்தகரை ஏற்றி 50 லட்சம் ரூபாவை மோசடி செய்த இந்திய பிரஜை ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.  சந்தேக நபர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பெயரை பயன்படுத்தி,  பணம் மோசடி செய்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும். சந்தேக நபரான இந்தியர் கடந்த நவம்பர் மாதம் தமிழ் வர்த்தகரிடம் பணத்தை மோசடி செய்துள்ளார். குறித்த வர்த்தகர் காவற்துறை தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, 7 மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டையில் கட்டடப் பொருட்களை விற்பனை செய்யும் பிரதான வர்த்தகர் இந்த மோசடியில் சிக்கியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளதாக கூறியுள்ள சந்தேக நபர், அவர்களின் உதவியுடன் 7.5 கோடி ரூபா வங்கி கடனை பெற்றுத் தருவதாக கூறியுள்ளதுடன், அதற்காக தனக்கு 50 லட்சம் ரூபாவை வழங்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வர்த்தகர், 25 லட்சம் ரூபாவை பணமாகவும், மீதி தொகையை காசோலையாகவும் வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட இந்திய பிரஜை ரகசியமான முறையில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், தற்போது, கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய  பிரஜை தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply