கனிமொழிக்கு ஜாமீன் மறுத்தது உச்ச நீதிமன்றம்

இரண்டாம் தலைமுறை தொலைபேசி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் இலஞ்ச குற்றச்சாட்டில் கைதாகி திஹார் சிறையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. கனிமொழி 200 கோடி ரூபா இலஞ்சமாக பெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை, கலைஞர் தொலைக்காட்சி கடனாகப் பெற்றத் தொகையே வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டது எனவும் வாதிடும் கனிமொழி தரப்பு வழக்கறிஞர்கள், கனிமொழியின் 10 வயது மகனின் நலன் கருதி அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.
எனினும் கனிமொழியின் ஜாமீன் கோரிக்கைக்கு சிபிஐ தெரிவி்த்த ஆட்சேபத்தையடுத்து, அவருக்கு பிணை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இலஞ்சம் பெறப்பட்டமை தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், அவர்கள் சாட்சிகளை மிரட்டி ஆதாரங்களை கலைத்துவிடுவார்கள் என சிபிஐ வாதிட்டது.

எனவே, கனிமொழிக்கு எதிரான அடுத்த குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டு பின்னர் வேண்டுமானால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply