குடாநாட்டில் தங்கவைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்கு போதியளவு இடவசதி இல்லை
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்குப் போதியளவு இடவசதி இல்லையென பிரதேச செயலக உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 60 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் தங்குவதற்கு அங்கு ஒரு பகுதி மாத்திரமே ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆசிரியர் கலாசாலையின் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இடம்;பெயர்ந்த மக்களை அங்கு தங்கவைத்திருப்பதால் போதியளவு இடமில்லையென பெயர் குறிப்பிடவிரும்பாத பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரி கூறினார்.
அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கு வயது வேறுபாடின்றி தினமும் மூன்று வேளையும் 250 ரூபா பெறுமதியான சமைத்த உணவு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டு வருவதாகவும், அம்மக்களுக்கான வைத்தியசேவைகள் சுகாதார அமைச்சினால் நேரடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply