உயிரை தியாகம் செய்து கடமையை நிறைவேற்ற தயார் : சவேந்திர சில்வா

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சர்வதேச சூழ்ச்சிகள் மற்றும் சக்திகள் தொடர்பாக அச்சமடைய தேவையில்லை எனவும் தாய் நாட்டை பாதுகாத்து கொடுத்த இராணுவ அதிகாரி என்ற முறையில், இலங்கையர்களுக்கு ஆபத்து வரும் சந்தர்ப்பத்தில், உயிரை தியாகம் செய்து செயற்படவும் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதிவதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவு சக்திகள் முன்னெடுத்து வரும் சூழ்ச்சிகளை தோற்கடிக்கவும் அந்த பொய் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை வழங்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, எவ்வாறான அச்சுறுத்தல்கள், தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் தனது இந்த தேசிய பொறுப்பையும், கடமையையும் நிறைவேற்ற தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

செனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ படம் பொய்யானது என உறுதிப்படுத்த கடந்த 21 ஆம் திகதி நியுயோர்க்கில், வெளிநாட்டு தூதுவர்கள் முன் தாம் மேற்கொண்ட முயற்சி இதில் ஒரு நடவடிக்கையே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னைப் பாராட்டியதாகவும் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply