பிரபாகரன் தனது பாரியாரை மட்டும் பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளர்?
தேசிய தலைவி திருமதி மதிவதனி தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவிலுள்ள தேசிய தலைவரின் உறவினர்கள் ஊடாக தெரியவரும் தகவல்களின்படி, நவம்பர் மாத இறுதியில் மதிவதனி தாய்லாந்து சென்றடைந்ததாகவும், தற்போது அவரை கனடாவிற்கு நிரந்தரமாக வருவிப்பதற்கான வழிவகைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.
தேசிய தலைவி தாய்லாந்திலிருந்து கனேடிய அரசிடம் அரசியல் தஞ்சம் கோரிய விடயம் கசிந்ததைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்திகளைத் தாங்கிவரும் கனேடியன் நசனல் போஸ்ட் என்னும் பத்திரிகைக்கு தேசிய தலைவரின் சகோதரி திருமதி வினோதினி ராஜேந்திரன் கடந்த மாதம் 18ம் திகதி பேட்டியளிக்க சம்மதித்ததாகவும் அறியப்படுகிறது. எனினும் எவரொருவரதும் அகதி அந்தஸ்து விண்ணப்ப விடயம் விண்ணப்பதாரிக்கும் விண்ணப்பம்கோரும் அரசுக்கும் இடையிலான அந்தரங்க விடயம் என்பதால் இவ் விடயம் மேற்படி பத்திரிகையில் வெளிவராமல் இருந்திருக்கலாம் என கனேடிய சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் தேசிய தலைவரின் பெற்றேர்கள் இன்னும் வன்னியிலேயே வசித்துவருகிறார்கள். தேசிய தலைவரின் இறுதி நாட்களில் அவருடனேயே அவர்கள் இருக்க விரும்பி வன்னியைவிட்டு விலக மறுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து தேசிய தலைவர் தனது பெற்றோர்களை வன்னிக்கு அழைப்பித்திருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் தவிர தேசிய தலைவரின் புதல்வி அயர்லாந்தில் இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேசிய தலைவரின் புதல்வன் இருக்குமிடம் பற்றி எந்தவித தகவல்களும் தெரியவரவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பார் தமிழ்செல்வன் இறப்பதற்கு முன்னர் அளித்திருந்த பேட்டியொன்றில் தேசிய தலைவரின் புதல்வர் புலிகளில் முக்கிய ஒரு பதவியில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
வன்னியிலுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இடம்பெயர மறுத்துவரும் தேசிய தலைவர், தனது பாரியாரை மட்டும் பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்ததை எந்தத் தமிழ் மக்களோ அல்லது தமிழ் ஊடகங்களோ கேள்விக்குட்படுத்தப்போவதில்லை. இது தேசிய தலைவருக்கும் தெரியும். இவைகளும் தேசிய தலைவரின் தீர்க்க தரிசனமெனவும் ராஜதந்திரமெனவும் புலம்பெயர் தமிழ் பிரகிருதிகளால் புகழப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply