பிரித்தானியாவில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு எதிராக தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அகதிகளாக தஞ்சம்கோரிய தமிழ் மக்களை நாடுகடத்த வேண்டாம் என கோரிஇ பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியப் பிரதமரின் காரியாலயத்திற்கு முன்னால் நேற்று மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளின் செயற்ப்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் தற்போதுள்ள சூழலில் தமிழர்களை இங்கிருந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்கு துன்புறுத்தப்படுவார்கள் எனவும்இ அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத பாதுகாப்பற்ற நிலையே காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தமிழ் அகதிகளை தொடர்ந்தும் திருப்பியனுபுவதானது பிரித்தானியா இரட்டை போக்குடன் செயற்படுவதாகவே தெரிவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவதுஇ சட்ட முறைக்கு எதிரானது எனவும்இ அகதிகள் தொடர்பிலான முறையான சட்டதிட்டங்களை பிரித்தானியா கொண்டிருக்கவில்லை எனவும் தமிழ் அகதிகளின் செயற்ப்பாட்டுக் குழுவினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளின் செயற்ப்பாட்டுக் குழுவினரில் ஒருவரான சட்டத்தரணி வாசுகி பிரதமரிடம் ஒப்படைக்கவுள்ள மனுவை அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் வாசிக்கும் போதே மேற்கண்ட விடையங்கள் அங்கு தெரிவிக்கப்பட்டன. மக்கள் மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply