வவுனியாவில் சிங்கள குடியேற்றம்

வவுனியா மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூர்வீக தமிழ் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. நெடுங்கேணியைச் சேர்ந்த கொக்கச்சான்குளம் என்ற இடத்தில் இந்தக் குடியேற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அந்த இடத்திற்குச் சிங்களப் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்திற்குக்கூட இதுபற்றி அறிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும் தான் கொண்டு வந்துள்ள போதிலும், அதுபற்றி அரச தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என்றும் கூறினார்.

இதனையடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த்தைகளில் இந்த விடயம் பற்றி பேசப்பட்டுள்தளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, வடகிழக்குப் பகுதிகளில் பிரதேச செலயகப் பிரிவுகளில் இடம்பெயர்ந்துள்ள தமிழ்க்குடும்பங்களின் பெருமளவு காணிகள் இராணுவ பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளமை மற்றும், அவ்வாறான தேவைக்காக மேலும் காணிகள் கோரப்பட்டுள்ளமை பற்றிய விபரங்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் அரசாங்கத்துடனான அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கத்தின் நேரடி கவனத்திற்குக் கொண்டு வரப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply