உள்ளூர், சர்வதேச சட்டங்களால் நாட்டை பாதுகாப்பது அவசியம் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மாநாட்டில் : ஜனாதிபதி
உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு எமது நாட்டை பாதுகாக்கவேண்டியது மிகவும் அவசியமானதும், முக்கியத்துவ மானதுமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.பயங்கரவாதம் இலங்கையில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றுடன் தொடர்புடைய சிலர் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அதனால் நாம் தொடர்ந்தும் விழிப்புடன் இருந்து செயற்படவேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.
பயங்ரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாடு புதிய சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளது. அவற்றில் தேசத்தின் பாதுகாப்பு முக்கியமானது.
பயங்கரவாதப் பிரச்சினை இலங்கைக்கு மட்டும் பொதுவான அச்சுறுத்தலல்ல. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளின் பல நாடுகளிலும் இந்த அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. கடந்த காலத்தில் இலங்கை பயங்கரவாதத்தினால் பெருமளவு அழிவை எதிர்நோக்கியிருந்தது. நாம் மீண்டும் எமது நாட்டில் பயங்கரவாதம் உயிர்த்தெழுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று ஆரம்பமாகிய ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஐம்பதாவது மாநாட்டில் பிரதான உரையாற்றும்போது தெரிவித்தார்.
ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஐம்பதாவது வருடாந்த அமர்வு கொழும்பு சினமன்ட் லேக்சயிட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமானது. இந்த அமர்வின் அங்குரார் ப்பண வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கை புதிய யுகத்திற்குள் பிரவேசித்துக் கொண்டி ருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் ஐம்பதாவது வருடாந்த அமர்வு இங்கு நடாத்தப்படுகின்றது. இந்த அமர்வை இலங்கையில் நடாத்து வதற்கு எடுத்த தீர்மானத்தை நான் பெரிதும் வரவேற்கின்றேன்.
உலகில் நன்கறியப்பட்ட பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தலும், குரூர செயற்பாடுகளும் முடிவுற்றதன் பயனாகவே நாடு புதிய யுகத்திற்குள் பிரவேசித்திருக் கின்றது. நாட்டு மக்கள் இன, மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட்டதன் பயனாக குரூர பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.
இதற்காக எமது மக்கள் பாரிய அர்ப்பணிப்புக்களையும், பிரார்த்தனை களையும் செய்துள்ளார்கள். இன்று நாடு சமூக பொருளாதார அபிவி ருத்தி பாதையில் சென்று கொண்டிருக் கின்றது. இதற்காக நாம் உறுதியான அடித்தளத்தை இட்டுள்ளோம். இதனால் எமது தேசத்தின் சகல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.
பயங்கரவாதம் இலங்கையில் முறியடிக்கப் பட்டாலும் பயங்கரவாதிகளின் தீங்கிழைக்கும் செயற்பாடுகள் இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தின் வேதனை வடுக்களை குணமாக்கும் பணியில் தீவிரமாக ஈடு பட்டுவரும் எனது அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியில் சகலவிதமான அழுத்தங் களும் கொண்டுவரப்பட்டு நம்நாட்டு மக்களின் கலாசார அபிலாஷைகளுக்கு அமைய நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்து வதற்கும் இந்த சக்திகள் குந்தகம் இழைத்துவருகின்றன.
பல தசாப்தங்களுக்குப் பின்னர் எமது நாட்டு மக்களின் நன்மைக்காக இன்று உருவாகியிருக்கும் சிறந்த வாய்ப்புக்களை நாம் சாதகமாகப் பயன்படுத்துவது அவ சியமாகும்.
இங்கு வந்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நாட்டை சுற்றிப்பார்க்கும்போது உல்லாசப் பிரயாணத்துறை எவ்விதம் சிறப்புற்று விளங்குகிறது என்பதையும், நேரடி மற்றும் மறைமுக முதலீடுகள் மூலம் வர்த்தகம் எவ்வாறு தளைத்தோங்கியுள்ளது என்பதையும் நீங்கள் அவதானிக்க முடியும். நாட்டின் வளங்களை ஆகக்கூடிய அளவுக்குப் பயன்படுத்தி சட்ட விதிகளையும், நடைமுறைகளையும் அதற்கேற்புடைய வகையில் வகுத்து நாளாந்த மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றங்களையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
நாம் இன்று நாட்டின் மனிதவளத்தை சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் பயன்படுத்தி 8 சதவீதத்துக்கும் கூடுதலான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியி ருக்கிறோம் இதனால் எமது நாடு ஆசியாவில் பொருளாதாரத் துறையில் நன்கு வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் முன்னணி நாடாகத்திகழ்கிறது.
நாம் புள்ளிவிபரங்களை வைத்துக்கொண்டு எதனையும் சாதிக்கமுடியாது எமது அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது. இதனால் எமது நாட்டு மக்களின் வாழ்வு வளமாகும். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் பொருளாதார அபிவிருத்தியினால் ஏற்படும் பயனை நாட்டிலுள்ள கீழ் மட்டத்தில் வாழும் கிராமிய மக்களை சென்றடையவேண்டும் என்பதில் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.
எமது நாட்டின் கிராம மட்டத்தில் வாழுகின்ற இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழிற் பயிற்சி போன்ற துறைகளில் ஏற்கனவே பயிற்சிகளை வழங்க ஆரம்பித் துள்ளோம். கிராம மட்ட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
பொருளாதார வளர்ச்சியானது சமமாக சகலருக்கும் பகிரப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
அதேபோல் சர்வதேச மட்டத்திலும் பொருளாதார வளர்ச்சி சமமாகப் பகிர்ந்து செல்லுவது அவசியம். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பொருளாதார கொள்கை, வளர்முக நாடுகளைப் பாதிக்கக் கூடாது. அந்நாடுகள் தங்களது உற்பத்திகளை வியாபார நோக்கில் வளர்முக நாடுகளில் கொண்டு வந்து குவிக்கக்கூடாது. இச்செயல் வளர்முக நாடுகளின் உள்ளூர் உற்பத்திகளையும், விவசாயத்துறையும் பாதிக்கும். அவர்களுக்கு சர்வதேச சந்தையிலும் இடம் கிடைக்காது. இந்நிலைமை நீக்கப்பட வேண்டும்.
இவ்விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்த வேண்டும். சகல நாடுகளுக்கும் நியாயமான முறையில் சர்வதேச சந்தை வாய்ப்பு கிடைக்கக்கூடிய வகையில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போது எல்லோருக்கும் நியாயம் கிடைக்கும்.
பெரும்பாலான ஆசிய ஆபிரிக்க நாடு களின் பணத்தை சூறையாடுதல், துப்பாக்கி முனையில் இலாபம் திரட்டுதல், போதை வஸ்து விற்பனை, மனிதர்களை கடத்திச் செல்லுதல், பொருளாதார குற்றச்செயல்களை செய்தல் போன்ற வன்முறைகள் தலைதூக்கி யிருப்பதனால் அவற்றை நாம் அடக்கிவிடு வது அவசியம். இத்தகைய முயற்சிகள் சர்வதேச பயங்கரவாதத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
மஹிந்த சிந்தனை எண்ணக்கருவுக்கமைய நாம் எமது இலக்குகளை அடைந்து எமது அரசாங்கம் சிறந்த வழியில் நாட்டை வளப்படுத்தும் என்பதில் தமக்கு அசையாத நம்பிக்கையிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்திய பின்னர் நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கு முன்னு ரிமை அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் நாட்டின் வரலாற்றில் இதுபோன்று என்றும் பெருஞ்சாலைகளையும், புகையிர தப் பாதைகளையும் அமைப்பதற்கு பெருமளவு பணத்தை முதலீடு செய்வதற்கு எந்த அரசாங்கமும் முன்வரவில்லையென்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ரவூப் ஹக்கீம், பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply