சனல் 4 அலைவரிசை ஒளிபரப்பிய படத்தின் மூலப்பிரதிகள் கண்டுபிடிப்பு: பஷில்
“இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற தலைப்பில் சனல் 4 அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட படத்தை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உண்மையான, மாற்றம் எதுவும் செய்யப்படாத வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நாட்டுக்கு எதிரான சில வெளிநாட்டுச் சக்திகளுக்கு இந்நாட்டிலுள்ள சிலர் உதவுவதாக அவர் குறிப்பிட்டார். சில டொலர்களுக்கும் யூரோக்களுக்கும் அடிமையாக வேண்டாம் என தாம் அவர்களை கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, சனல் 4இல் வெளியான காட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் சிங்கள மொழியில் உரையாடுவதைப் போன்றே வீடியோ அமைந்திருந்தது.
ஆனால், தற்போது இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிடமிருந்து தமக்கு கிடைத்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்ற, மாற்றம் செய்யப்படாத அசல் வீடியோ என்று வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் தமிழ் மொழியில் உரையாடுவதை போன்று காட்சி அமைந்திருக்கின்றது.
சனல் 4 வீடியோவிலும், தற்போது இலங்கை யில் வெளியாகியிருக்கும் வீடியோவிலும் “காட்சிகளில் பெரிதளவு வித்தியாசங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை’.
பின்னணியில் கேட்கும் மொழியில் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. சனல் 4 தொலைக்காட்சி வீடியோவில் சிங்கள மொழி யில் குரல்கள் கேட்கின்றன. ஆனால் தற்போது இலங்கையில் வெளியாகியுள்ள வீடியோக் காட்சியில் பின்னணிக் குரல்கள் தமிழ் மொழியில் கேட்கின்றன இதேவேளை, இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நாவும் பல் வேறு நாடுகளும் கோரி வருகின்றமை குறிப் பிடத் தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply