இலங்கையில் நடந்த யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.பிரித்தானிய தொலைக்காட்சி ஊடகமொன்று அண்மையில் வெளியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை விவகாரம் தொடர்பில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை என தாம் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இந்த விடயம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply