தமிழ்ப் பெண் கைதிகளை பகிரங்க இடங்களில் வைத்து பெண் இராணுவத்தினர் சோதனையிடுவதாகக் குற்றச்சாட்டு

தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லும் போது பெண் இராணுவச் சிப்பாய்கள் பகிரங்க இடத்தில் அவர்களைச் சோதனையிடுவதனால் கைதிகள் வெட்கத்தால் கூனிக் குறுகிப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்கள் பார்த்திருக்க சோதனையிடுவதால் பெண் கைதிகள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு சுகயீனம் அடைகின்றனர் இப்படி “நாம் இலங்கையர்” அமைப்பு விசனம் தெரிவிக்கின்றது.நீதிமன்ற விசாரணைகளுக்காக தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னரும், சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னரும் அதிகாரிகள் அவர்களை சோதனையிடுவது வழக்கம்.

தனி அறையில் வைத்தே அவர்களை இராணுவத்தினர் சோதனையிட வேண்டும். ஆனால் கீழ்வரும் தகவல்கள் முற்றிலும் மாறுபட்டனவாகும்.யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ரகுபதி சர்மா (வயது 53) மற்றும் அவரது மனைவி திருமதி சர்மா(வயது 50 ) ஆகியோர் 11 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.திருமதி சர்மா வெலிக்கடைச் சிறையில் பெண்கள் பிரிவிலும், ரகுபதி சர்மா மகஸின் சிறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போதும், மீண்டும் சிறைச்சாலை திரும்பும் போதும் பல்வேறு இன்னல்களை உடல், உள ரீதியாக எதிர்நோக்குகின்றனர் என நாம் இலங்கையர் அமைப்பு தெரிவிக்கின்றது.2000 ஆம் ஆண்டு ரகுபதியும், அவரது மனைவியும் அவர்களது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் வௌ;வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இவர்களை விசாரணைகளுக்காக அடிக்கடி நீதிமன்றத்துக்கு அழைத்துவருவது வழமை. மனைவி வெலிக்கடைச் சிறையிலிருந்தும், கணவன் மகஸின் சிறையிலிருந்தும் அழைத்துவரப்படுவர். அவ்வாறு அங்கு கூட்டிச் சென்று பெண் இராணுவ சிப்பாய்கள் சோதனையிடும் போது பகிரங்க இடத்தில் என்னைச் சோதிக்கின்றனர். இதனால் நான் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளேன் என திருமதி சர்மா தெரிவித்தார் என்று நாம் இலங்கையர” அமைப்பின் தலைவர் உதுல் பிரேம ரட்ண தெரிவித்தார்.

கடந்த மாதம் ரகுபதி சர்மாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து மீண்டும் கூட்டிச் சென்ற அதிகாரிகள் பகிரங்க இடத்தில் அவரைச் சோதனையிட்டனர். அவர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.இவர்கள் இருவரும் மட்டுமல்ல, நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் தமிழ் அரசியல் கைதிகள் ஒவ்வொருவரும் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

தங்களுடைய இரண்டு பிள்ளைகளையும் பிரிந்து சிறைவாசம் அனுபவிக்கும் இவர்கள் சிறைச்சாலைகளுக்குள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். இவர்களை இப்படி அரசு கொடுமைப்படுத்தலாமா என “நாம் இலங்கையர்” அமைப்பு கேட்கிறது. இராணுவத்தின் இந்த நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமை மீறல் எனக் கூறிய உதுல் பிரேமரட்ண, வழக்கு தொடரப்பட்டுள்ள போதும் அரசு இவர்களைப் பிணையிலாவது விடுவிக்காதது ஏன் என்றும் கேட்கின்றார் உதுல் பிரேமரட்ண.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply