விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி அழைப்பு
ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடையுமாறு விடுதலைப் புலிகளுக்கு இறுதி அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகரை இராணுவத்தினர் கைப்பற்றிய செய்தியை அறிவிக்கும் முகமாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நாட்டு மக்களுக்காக ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருந்தார்.
எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புக்கள் தொடர்ந்தும் அவசியம். மாயையான ஈழப்போரும், முல்லைத்தீவில் சிறிய காட்டுக்குள் மறைந்திருக்கும் பயங்கரவாதமும் முற்றாக ஒழிக்கப்படும்வரை அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என அனைவரிடமும் கோரிக்கை விடுக்கிறேன். இந்தத் தருணத்தில் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடையுமாறு விடுதலைப் புலிகளுக்கு ஒரு இறுதிச் செய்தியை விடுக்கிறேன் என அவர் கூறினார்.
கிளிநொச்சியைக் கைப்பற்றுவது மஹிந்த ராஜபக்ஷ காணும் பகல் கனவு என கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் கூறியிருந்ததாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, “ஆம், அது மஹிந்த ராஜபக்ஷவின் கனவல்ல, அனைவரினதும் கனவு” எனத் தனது உரையில் தெரிவித்தார்.
வடபகுதி மக்கள் தசாப்த காலங்களாக தமது உரிமைகளை அனுபவிக்கமுடியாதவாறு விடுதலைப் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும், நாட்டின் தலைவர் என்ற ரீதியில் எதிர்கால சந்ததியின் பாதுகாப்பையும் சேர்த்து உறுதிப்படுத்துவதாக உறுதியளிப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்தியை இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகாவும் அறிவித்தார். கிளிநொச்சியைக் கைப்பற்ற இராணுவத்தினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விபரங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply