தெற்கு சூடான் சுதந்திரப் பிரகடனம்
உலகின் புதிய நாடாக மலர்ந்துள்ள தெற்கு சூடான் இன்று சனிக்கிழமை அதிகார பூர்வமாக சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. புதிய தேசம் தெற்கு சுடானின் முதலாவது சுதந்திர தினத்தில் தலைநகர் ஜுபாவில் ஆயரக்கணக்கான மக்கள் கூடியிருக்க, தெற்கு சூடானுக்கான சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய ஜோண் ஹரங்கின் சமாதிக்கு முன்பாக தேசியக் கொடி முதற்தடவையாக ஏற்றப்பட்டது.
தெற்கு சூடானின் அரசியலமைப்பில் கையெழுத்திட்ட சல்வா கிர், தமது புதிய தேசத்தின் முதலாவது அதிபராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்
வடக்கு சுடானுடனான நீண்ட கால சுதந்திரப் போரில் பெரும் இழப்புகளை தெற்கு சுடான் சந்தித்திருந்தது.
50 வருடங்களுக்கும் அதிக காலம் தொடர்ந்த சிவில் யுத்தத்தின் முடிவில் சுடானை சுமூகமாகப் பிரித்து புதிய தெற்கு சுடானை உருவாக்குவதற்கு பெரும் அளவிலான சர்வதேச முயற்சிகள் தேவைப்பட்டன.
அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பையடுத்து இப்போது ஒருவாறு இரண்டு சுடான்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு, தெற்கு சுடான் பிறந்துவிட்டது.
பல்லாயிரக்கணக்கில் திரண்டிருக்கும் மக்கள் மத்தியில் வடக்கு சுடான் அதிபர் ஒமர் அல் பசீர், ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலர் பான் கீ மூன் உட்பட பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பான் கீ மூன், வடக்கு மற்றும் தெற்கு சுடான்கள் ஒற்றுமையாக எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்று கூறினார்.
இன்று சுதந்திரம் கிடைத்து விட்டாலும், நீண்ட கால போரினாலும் வேறு பல காரணங்களாலும் ஏற்பட்டிருக்கும் வறுமை நிலையை போக்க தெற்கு சூடான் மிகுந்த சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply