இந்தியாவும் சீனாவும் என்றும் எமது நட்பு நாடுகள்
ஆசியாவில் பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் மிகவும் பலம் வாய்ந்த இரு அயல் நாடுகளான இந்தியாவும், சீனாவும் தங்களின் குட்டித்தங்கையான இலங்கையை அன்புடன் அரவணைத்து சகல உதவிகளையும் செய்து வருகின்றன.
பயங்கரவாத யுத்தம் இலங்கையில் உச்சக் கட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது ஏனைய மேற்குலக வல்லரசுகளை போலன்றி இவ் விரு நாடுகளும் எவ்வித மறைமுகமான அரசியல் இலாபத்தையும் எதிர்பாராமல் உற்ற நண்பர்களாக பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் மனமுவந்து எமக்கு உதவி செய்தன.
தத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதியும், சமாதானமும் ஏற்பட்டிருக் கும் இவ்வேளையில் யுத்தத்தினால் முழுமையாக அழிவடைந்த வட பகுதியின் ரயில் பாதையை மீண்டும் அமைக்கும் பொறுப்புகளை இந்தியா நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றது. அதே வேளை யில் சீனா வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ஏ9 பாதையையும் அதனை இணைக்கும் ஏனைய குறுக்கு பாதைகளையும் செப்பனிட்டு திருத்தி அமைக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தியா யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி வரு கிறது. அத்துடன் பலாலி விமான நிலையத்தை புனர்நிர்மாணம் செய்தல் விமான இறங்கு பாதையை புதிதாக செப்பனிட்டு பாரிய விமானங்களையும் தரை இறக்கக் கூடிய நவீன விமான நிலையமாக பலாலியை மாற்றுவதற்கும் இந்தியா உடன்பட்டு அதற்க மைய நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தையும் பாரிய கப்பல்கள் தரித்திருந்து பொருட்களை அதிக கஷ்டமின்றி இறக்குவதற்கான சகல வசதி களை கொண்ட ஒரு துறைமுகமாக மாற்றுவதற்கும் இந்தியா தன் னுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கான இணக்கப்பாட் டையும் தெரிவித்துள்ளது.
இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் நல்லுறவு வளர்ந்து வந்தது. இதனால் 1952ம் ஆண்ட ளவில் சீனா இலங்கையுடன் இறப்பர், அரிசி ஒப்பந்தத்தை ஏற்படு த்தி அன்று எங்களுடைய இறப்பரை வாங்கி இலங்கை அன்று எதிர்நோக்கியிருந்த அரிசி தட்டுப்பாட்டைப் போக்க இலங்கைக்கு அரிசியை ஏற்றுமதி செய்தது.
அன்று அரிசியுணவு இலங்கையின் அரசாங்கங்களையே ஆட்டங்காட்டக்கூடிய ஆயுதமாக இருந்து வந்தது. அதனால் அன்று இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிலி ருந்து வந்த அரசாங்கங்கள் தங்களை அதிகாரத்தில் வைத்திருப்ப தற்காக அன்று மக்களுக்கு வாரமொன்றுக்கு ஒரு கொத்து அரிசியை, அதாவது அரை கிலோ அரிசியை இருபத்தைந்து சதத் திற்கும், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு கொத்து அரிசியை மக்களுக்கு இலவசமாகவும் வழங்கின.
இந்த அரிசிப் பிரச்சினை காரணமாக பொது வேலை நிறுத்தங்களும் நாட்டில் கலவரங்க ளும் ஏற்பட்டன. அதனால் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பிரதம மந்திரியாக இருந்த டட்லி சேனநாயக்க தமது பிரதம மந்திரி பதவியை இராஜினாமா செய்தார்.
அதையடுத்தே இலங்கை அரசியலில் வன்முறைகளும், பிரிவினை வாத பிரச்சினைகளும் தலைதூக்கி, நாட்டின் சமாதானத்திற்கும், ஐக்கியத்திற்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இந்த பின்னணியில் தனது திறமையை மாத்திரமே அணிகளாக வைத் துக்கொண்டு அரசியல் அதிகாரத்துக்கு வந்து புகழ் ஏணியின் உச்சியில் வீற்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களின் அரசாங்கத்துக்கு பூரண ஆதரவையளிக்கும் முகமாக சீனா அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய அபி விருத்தித் திட்டங்களை நிறைவேற்றி வருவது உண்மையிலே பாராட்டுக்குரியது.
1956ஆம் ஆண்டு முதல் சீனப் பிரதம மந்திரி சூஎன்லாய் பதவியில் வீற்றிருந்த காலம் முதல் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையி லான நல்லுறவு வளர்ந்து வந்தது. அதனால்தான் இலங்கையின் மதிப்பை பெருக்கக் கூடிய வகையில் 1970ம் ஆண்டு தசாப் தத்தின் முற்பகுதியில் சீனா அரசாங்கம் பண்டாரநாயக்க ஞாப கார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தை பலகோடி ரூபா செல வில் நிர்மாணித்து இலங்கைக்கு அன்பளிப்புச் செய்தது.
1976 ஆம் ஆண்டில் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இவ்விதம் இந்தியாவும் சீனாவும் இலங்கைக்கு நட்புறவாக இருந்து வருவது குறித்து மன நிறைவடைகின்றார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply