தமிழகம் வரும் ஹிலாரி இலங்கை தொடர்பில் எதனையும் பேசமாட்டார்
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் எதிர்வரும் 19ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். தமிழ் நாட்டுக்கும் செல்லவுள்ள அவர் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்போது அரசாங்கத்துடன் இலங்கை உட்பட வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தமாட்டாரென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரது விஜயம் அரசு ரீதியாக அமையாதென நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்படுகிறது. சிவில் சமூக மற்றும் அபிவிருத்தி விவகாரம் தொடர்பான கொள்கையாளர்களையும் அரசசார்பற்ற அமைப்புக்களையும் அமெரிக்கக் கம்பனிகளின் பிரதிநிதிகளையும் வர்த்தக குழுவினரையும் சந்தித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களும் புதுடில்லியில் நடைபெறும். வெளிநாட்டு அமைச்சர்களுடனான சந்திப்பில் அயல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும்ரூசூ39; இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
புதுடில்லிக்கும் வோஷிங்டனுக்கும் இடையில் இலங்கை விவகாரம் குறித்த வழமையான கலந்துரையாடல் நடைபெறும். தமிழ் அகதிகளை தாயகத்திற்கு திருப்பியனுப்புதல், தமிழ் சிறுபான்மையாளர்களின் தேவைகள் மதிக்கப்பட வேண்டும் ஆகிய விடயங்களில் இரு நாடுகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனவென அந்த வட்டாரம் கூறியது.
ஆனால் இலங்கைக்கு எதிரான யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து சென்னையில் கலந்துரையாடப்படமாட்டாதென மேற்படி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்திய விஜயத்தையடுத்து ஹிலாரி கிளின்டன் கிறீஸிற்கு சென்ற பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். சென்னைக்கு விஜயம் செய்யும் முதலாவது அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அவர் இந்தோனேசியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply