மும்பைத் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்
மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் வெளியிட்டுள்ளார். மிலேச்சத் தனமான பயங்கரவாதத் தாக்குதலாக இதனைக் கருத வேண்டுமென ஜனாதிபதி தமது கண்டன செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். மும்பையில் இடம்பெற்ற மூன்று குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர். 2008ம் ஆண்டு மும்பையில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இந்தத் தாக்குதல் கருதப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலை அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவும் கண்டித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply