அமிர் அவர்களின் 22வது சிரார்த்த தினத்தில் வரதராஜப்பெருமாள்

கொழும்பில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களில் 22வது வருட சிரார்த்த தினத்தினை தமிழரசுக்கட்சி தனது அலுவலகத்தில் நேற்று புதன் கிழமை அனுஷ்டித்தது. இந்நிகழ்விற்கு ஈபிஆர்எல்எப் நாபா அணியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் வட-கிழக்கு மாகாணசபையின் முதல்வருமான வரதராஜப்பெருமாள் அவர்களும் கலந்து கொண்டார்.

யாழ். மார்டின் வீதியில் 13/07/2001 அன்று நடைபெற்ற இந் நிகழ்விற்கு தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் குலநாயகம் அவர்கள் தலைமை தாங்க கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, கட்சி முக்கியஸ்தர்கள் சி.வி.கே.சிவஞானம், சிற்றம்பலம், இரா சிவசந்திரன் உட்பட எம்.கே.சிவாஜிலிங்கம் த.சித்தார்த்தன் போன்றோரும் பங்குகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்க்க மறுத்து அதனை முழுமையாக ஆதரித்து நின்றமைக்காக1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி கொழும்பில் வைத்து புலிகளால் அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply