வடக்கில் தேர்தல் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படக் கூடாது: த.தே.கூ

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற வேண்டுமானால் வடக்கு மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமானால் தேர்தல் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படக் கூடாது என்று தேர்தல்கள் ஆணையாளரையும் அரசாங்கத்தையும் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேச கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குடாநாட்டு மக்களை அச்சுறுத்தி கூட்டமைப்புக்கான வாக்குகளை முடக்கி கிடைக்கப் பெறுகின்ற வாக்குகளில் வெற்றிபெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திட்டமாகும். எனினும் அரசாங்கத்தின் இரட்டை வேடத்தன்மையை எமது மக்கள் புரிந்து கொண்டிருப்பதால் கூட்டமைப்பின் வெற்றி உறுதியென்பது தெளிவாகியிருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

யாழ். குடாநாடு உள்ளிட்ட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கும் நிலையில் அங்குள்ள நிலைவரங்கள் குறித்து விபரிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply