வட பகுதி மக்களின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது
வடக்கு மக்கள் இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் வழங்கிய தீர்ப்பை அரசாங்கம் சிரம் தாழ்த்தி, அமைதியுடன் ஏற்றுக் கொள்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அமைச்சரின் கருத்தை கேட்டபோதே அவர் மேற்கூறியவாறு பதிலளித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பான்மை பலத்துடன் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத் துக்கு அனுமதி வழங்கியுள்ளனர். ஜனாதிபதியின் தலைமையில் செயற்படுத்தப்படும் “திவிநெகும”, “கமநெகும”, “மஹநெகும” ஆகிய கிராமப்புற உட்கட்டமைப்பு, கல்வி அபிவிருத்தி ஆகியவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக அரசாங்க ஊழியர்களின் பெரும்பாலானோர் அரசாங்கத்துடன் இருப்பது எமக்கு பெரும் தைரியத்தை கொடுத்துள்ளது.
அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் விவசாய மக்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் வெற்றிலைக்கு வாக்களித்து எமது கொள்கைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
வடக்கில் உள்ள மக்களின் தீர்ப்பை நாம் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம். எனினும் இன, மத, குல பேதம் இன்றி வடக்கை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி தலைமையில் நாம் எடுத்துள்ள தீர்மானம் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் அந்த செயற்பாடுகளை கைவிட முனைந்திருப்பது கவலையளிக்கிறது.
வடக்கில் மக்களை தமது பக்கம் ஈர்ப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இனவாத ரீதியில் பிரசாரம் செய்துள்ளமை கவலைக்குரியது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply