சுமத்திரனுக்கு கடும் கண்டனம்: தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்வொன்றில் திரு. சுமத்திரன் அவர்கள் புலம்பெயர் மக்களின் போராட்டங்களை விமர்சித்தது மற்றும் சிங்கள மக்கள் ஏற்கும் தீர்வை மட்டுமே பெறவேண்டும் எனவும் போர்க்குற்றங்கள் பற்றிக் கதைத்து சிங்களவர்களை நாம் கோபப்படுத்தக் கூடாது எனவும் கூறியிருக்கின்றார். பல நாடுகளில் இதே கருத்தை தெரிவித்திருக்கின்றார்.
திரு. சுமத்திரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் ஆகிய நாம் எமது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு திரு. சுமத்திரன் அவர்கள் தெரிவித்த கருத்தை திரும்பப் பெறவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
சிங்கள ஆட்சியாளர்களிடம் மண்டியிடவே கொடுப்பதை பெற்றுக்கொள்வதோ அடிமைத்தனத்துக்கு ஈடானது. இது சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். அது அவருடைய தனிப்பட்ட கருத்தா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா என அறிவிக்க வேண்டும்.
திரு. சுமத்திரன் அவர்கள் வெளியிட்ட கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்களை புறக்கணிக்கச் செய்துவிடும் ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைந்து செயலாற்ற வேண்டும்.
GTF, BTF, ATC போன்ற அமைப்புக்கள் இனி இவரை அழைக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply