ஒஸ்லோ படுகொலை – தமிழர் விடுதலைக் கூட்டணி கடும் கண்டனம்

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி நோர்வே தூதுவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அக்கடிதத்தின் முழு தமிழ் வடிவம் கீழே…

பெருமதிப்பிற்குரிய ஹில்டா ஹரல்ஸ்டட்

2011-07௨7

தூதுவர்

றோயல் நோர்வே தூதுவராலயம்

கொழும்பு

 

அண்மையில் இடம்பெற்ற இளைஞர்கள் மீதான படுகொலையை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது.

மதிப்புக்குரிய தூதுவருக்கு,

பயங்கரவாதி ஒருவனால் ஏற்பட்ட இரு கொடூர சம்பவங்களினால் நற்பண்பு கொண்ட நோர்வேஐிய மக்கள் பல அப்பாவி உயிர்களை இழந்த சம்பவத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நண்பர்களும் இப் பேரிழப்பால் எவ்வளவு துன்பத்தை அடைவார்கள் என்பதனை இலங்கையர்களாகிய நாம் நன்கறிவோம். குண்டு வெடிப்பாலும் துப்பாக்கிச் சூட்டினாலும் தாக்கப்பட்டு தப்பியவர்கள் எப்போதும் அதிர்ஸ்டசாலிகள் அல்லர், ஏன் எனில் அவர்கள் தமது எஞ்சிய வாழ்நாளில் எத்தகைய கொடூரத்தை தாங்கவேண்டி வரும்.

இந்த புத்தியற்ற கொலையாளிகள் இத்தகைய சம்பவங்களில் இருந்து உயிர் தப்பியவர்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் மீது நிரந்தர துன்பத்தை ஏற்படுத்தும் என்பதனை; உணர்ந்தும், இவற்றால் தமக்கு எவ்வித பிரயோசனம் இல்லை என்பதனை தெரிந்தும், இவ் ஈனச்செயலில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி மிக்க விசுவாசத்துடன் இவ்விரு சம்பவங்களினால் துன்புறும் உறவினர்கள, நண்பர்கள் மற்றும் அரசுக்கும் ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது. இவ் அப்பாவிகளின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

சம்பந்தப்பட்ட துயருறும் உறவினர்களுக்கும் மாட்சிமை தாங்கிய மன்னர் ஹெரால்ட் ஏ அவர்களுக்கும் எமது ஆதங்கத்தை தெரிவிக்குமாறு தங்களை வேண்டிக்கொள்ளுகின்றோம்.

வீ. ஆனந்தசங்கரி தலைவர்

தமிழர் விடுதலைக் கூட்டணி

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply