வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு எதுவும் கிடையாது : திஸ்ஸ அத்தநாயக்க

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு எதுவும் கிடையாது. வேட்டி மற்றும் சேலைகளை கொடுத்து அம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தபோதிலும் முறையான பதிலடியைக் கொடுத்து தமிழ் மக்கள் எதிர்ப்பையும் நம்பிக்கையற்ற தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இராணுவத்தையும் அரச அதிகாரிகளையும் மிகவும் மோசமான முறையில் கடந்த தேர்தலில் அரசாங்கம் பயன்படுத்திய போதிலும் அரசாங்கத்தால் 90 வீதமான வெற்றியை அடைய முடியவில்லை. பொலிஸ் மற்றும் தேர்தல் திணைக்களம் சுயாதீன தன்மையை இழந்துள்ளது. எனவே ஒற்றுமையுடன் போராடி தற்போதைய மோசடி அரசை விரட்டியடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியõளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாற கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

அரசாங்கம் வழமையான முறையில் மோசடிகளின் ஊடாக தேர்தலில் வெற்றி கண்டுள்ளது. குறிப்பாக வடக்கையும் கைப்பற்றி மோசடி ஆட்சிக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ள அரசாங்கம் முயற்சித்த போதிலும் அதில் தோல்வி கண்டு ஆளும் தரப்பின் மூக்கு உடைபட்டுள்ளது. எவ்வாறாயினும் வடக்கு வாழ் மக்களின் பல்தரப்பட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் ஒரு தீர்வும் கிடையாது. ஏமாற்று வேலைகளின் ஊடாக காலத்தை கடத்தி விடலாம் என்று எண்ணிய போதிலும் அதிலும் அரசு ஏமாற்றம் கண்டுள்ளது.

தற்போது கட்டாயமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. கடந்த வடக்கு உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் இதனையே உணர்த்தியுள்ளது. தரம் குறைவான பெற்றோல் இறக்குமதி செய்து பல கோடி ரூபாவை தற்போதைய அரசு மோசடி செய்தது. ஹெஜ்ஜிங் ஒப்பந்தத்தில் 210 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டது.

அது மட்டுமின்றி கட்டுநாயக்க சம்பவம் உட்பட ஜனநாயக விரோத சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அரசின் மோசடி செயற்பாடுகளை தொடர்வதற்கு தென்பகுதியில் பொது மக்கள் வாக்களித்ததாக அமைந்துவிடாது. பல அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் பொது மக்கள் ஐ.தே.க. வை ஆதரித்து இருந்தனர். எனவே மேலும் வலுவான முறையில் ஒன்றினைந்து மோசடி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply