செனல்4 ஊடகத்திற்கு எதிராக பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் : கோதபாய

செனல்4 ஊடகத்திற்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். செனல்4 ஊடகம் பொறுப்பற்ற வகையில் இலங்கை தொடர்பான ஆவணப்படங்களை ஒளிபரப்புச் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்தவர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும், 58ம் பிரிவு கட்டளைத் தளபதி சவேந்திரா சில்வாவும் உத்தரவிட்டதாக சித்தரிக்கப்படும் இரண்டு படைவீரர்களின் செவ்விகளை  செனல்4 அண்மையில் ஒளிபரப்புச் செய்துள்ளது.
 
சவேந்திரா சில்வா எல்லோரிடமும் தமது உத்தரவுகளை தெரிவித்திருக்க வாய்ப்பில்லை என கோதபாய தெரிவித்துள்ளார்.
 
படைவீரர்கள் என செனல்4 சித்தரிக்கும் நபர்கள் படைவீரர்களாக இருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்தவர்கள் பற்றி அப்போதைய இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூணே எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக எவ்வாறு குற்றம் சுமத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் புள்ளி விபரங்களின் படி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 300,000 பொதுமக்கள் இருந்ததாகவும் இதில் 296000 அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இடம் நகர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எஞ்சியவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனவும் அவர்கள் யுத்தத்தின் பொது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் கனடா இந்தியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சூசை, தமிழ்ச் செல்வன் ஆகியோரின் குடும்பங்களை பராமரித்து வருவதாகவும் பிரபாகரனின் பெற்றோரை பராமரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தற்கொலைப் போராளிகள், முக்கிய தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என பல்வேறு பாரிய கொலைச் சம்பவங்களுடன் தொடர்படைய 11000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்ததாகவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு பலர் தற்போது சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சுய லாப நோக்கத்திற்காக இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply