நுகேகொடயில் திடீர் சோதனை: 206 பேர் கைது!

24 மணித்தியாலங்களாக நுகேகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 209 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணிதொடக்கம் இன்று காலை 6 மணிவரையான 24 மணித்தியாலங்கள் நுகேகொடை பொலிஸ் வலயத்திற்குட்பட்ட அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 100 பேர், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 37 பேர், சந்தேகத்தின் பேரில் 14 பேர் மற்றும் வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் உள்ளடங்களாக 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக 406 வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாக நுகேகொட பொலிஸார் குறிப்பிட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply