மிலேச்சத்தனமான தாக்குதல்கள் ஊடக சுதந்திரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது : ரவூப் ஹக்கீம்
சிரேஷ்ட ஊடகவியலாளரும், உதயன் நாளிதழின் செய்தி ஆசிரியருமான ஞா.குகநாதன் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான இழி செயல்களையும், கோழைத்தனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில உலக நாடுகளில் நடைபெறுவதைப்போன்று இலங்கையிலும், குறிப்பாக வடக்கில் ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் தாக்குதல்களுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றிக் கொண்டு சுதந்திரமாக மக்களுக்காக எழுதிவரும் குகநாதன் நான் நேரில் நன்கு அறிந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.
இதழியல்துறையோடு தம்மை முழுமையாக ஈடுபடுத்தி அர்ப்பண சிந்தையோடு செயலாற்றும் குகநாதன் போன்ற ஊடகவியலாளர்களை, அச்சுறுத்திப் பணியவைக்க எத்தனிப்பதும், அத்தகையோர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் தொடுப்பதும், இலங்கை போன்ற நாடுகளில் ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது. இவ்வாறான இழி செயல்களையும், கோழைத்தனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply