உதயன் ஆசிரியர் மீது தாக்குதல் அறிக்கையிடுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்பு
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியரான குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் அதனடிப்படையில் உடனடியாக அறிக்கையை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோனுக்கு பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் கடந்த வெள்ளிக்கிழமை கடமையை முடித்துக்கொண்டு நாவலர் வீதியிலுள்ள தனது வீட்டிற்கு இரவு 7.30 மணியளவில் நடந்து சென்றுகொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது இரும்புக் கம்பியினால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்ப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சையளிக்கப்பட்டதுடன் அவர் உடல் தேறிவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply