பிரிவினைவாதக் கொள்கையை பின்பற்றியமைக்காக தமிழர்களை குறைகூற முடியாது ஜே.வி.பி. : சோமவன்ஸ

பிரிவினைவாதக் கொள்கையை பின்பற்றியமைக்காக தமிழர்களை குறைகூற முடியாது. ஏனெனில் அத்தகைய கொள்கையை பின்பற்றுவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டது எனவும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறியுள்ளார். எனினும் சரி பிழைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான தருணம் வந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். கம்பஹாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சகோதரத்துவ தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ‘ஜே.வி.பி. இனவாதத்தை தழுவியுள்ளதாக அண்மைக்காலத்தில் பலர் தவறான அபிப்பிராயத்தை பரப்பியுள்ளனர்.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளையும் உத்தியோகபூர்வ மொழிகளாக்க வேண்டும் என ஜே.வி.பியே வலியுறுத்தியது. ஏனைய கட்சிகள் 3 மொழிகளையும் உத்தியோகபூர்வ மொழிகளாக தயாரில்லாததால் இனவாதத்தை பின்பற்றின’ எனவும் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.

தமது கட்சியின் சிங்களப் பெயர் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) என்ற போதிலும் சில தமிழ், முஸ்லிம் கட்சிகள் அதை இனவாத கட்சியாக காட்டுவதற்காக வேண்டுமென்றே ஜனதா விமுக்தி பெரமுன (தேசிய விடுதலை முன்னணி) என குறிப்பிடுகின்றனர் எனவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply