ஜே.வி.பி. நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது : விமல்

ஜே.வி.பி கட்சி குறுகிய அரசியல் லாபங்களுக்காக நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து கொண்டு நாட்டுக்கு எதிராக ஜே.வி.பி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் புலம்பெயர் தமிழர்கள் முனைப்பு காட்டி வருவதாகவும், அந்த முனைப்புக்களுக்கு ஜே.வி.பி ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போதிலும் ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யினர் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
 
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழ் அரசியல் கைதிகளாக வெளிக்காட்ட ஜே.வி.பி முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஜே.வி.பி தீவிரமாக இறங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply