ரணில் இன்று அவசரமாக நாடு திரும்புகிறார்
57 ஆவது பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்புகிறார். எதிர்வரும் 3ம் திகதி நாடு திரும்புவது என திட்டமிட்டு, பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் திடீரென நாடு திரும்பக் காரணம் கட்சியுள் காணப்படும் தலைமைத்துவ பிரச்சினைகளே என நம்பத்தகு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply