கொழும்பில் சனல்-4க்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை மீது திட்டமிட்டு பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வரும் சனல்- 4 தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை ஊடகவியலாளர்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நேற்று நண்பகல் நடந்த இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர வெகுசன ஊடகவியலாளர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.
அரசாங்க மற்றும் தனியார் துறை பத்திரிகை மற்றும் இலத்திரனியில் ஊடகவியலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சனல்௪ தொலைக்காட்சி சேவை எல்.ரி.ரி.ஈயின் அனுசரணையுடன் அவர்களின் கோடான கோடி ரூபா பணத்தினைப் பெற்று ஒரு தலைப்பட்சமாக இலங்கைக்கு எதிராக திட்டமிட்டுச் செயற்படுகிறது.
எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் ஒரு சில புலம் பெயர்ந்த தமிழர்களின் வழிநடத்தலின் மூலம் ஊடக சுதந்திரத்தை காற்றில் பறக்கவிட்டு சனல்௪ செயற்படுகிறது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில வெகுஜன ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் சிங்கள தொலைக்காட்சி, வானொலி, வசந்தம் தொலைக்காட்சி, வானொலி, பிறைம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களும் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்களும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்களும், ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை இழைக்கும் பிரிட்டனின் சனல்௪ ஊடகவியலாளர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பெற்று இலங்கைக்கு வராமலேயே வெளிநாட்டில் உள்ள இலங்கையை எதிர்ப்பவர்களிடமிருந்து பொய்த் தகவல்களைப் பெற்று ஒரு நாடகமாக நடிக்கச் செய்து போலியாகத் தயாரிக்கப்பட்ட விவரணப்படத்தை சனல்- 4 வெளியிட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
நிவ்ஸ் ஒப்த வேல்ட் பத்திரிகையின் இடம்பெற்ற மோசடி மூலம் பிரிட்டிஷ் ஊடகவியலாளர் அரசாங்கத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக் கேட்கிறார்கள் என்ற உண்மை விசாரணைகளின் மூலம் புலப்பட்டி ருக்கிறது.
இந்த ஊழலை வெளிப்படுத்திய ஒரு நேர்மையான ஊடகவியலாள ரும் திடீரென்று மரணமடைந்திருக்கி றார். இவ்விதம் நடுநிலை இன்றி பக்கச் சார்பாக தவறான தகவல் களை வெளியிடும் நேர்மையற்ற பிரி ட்டிஷ் ஊடகவியலாளர்களுக்கு இல ங்கையைப் பற்றி விமர்சிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறதென்று கல ந்து கொண்ட ஊடகவியலாளர் கள் கேள்வி எழுப்பினர்.
“இலங்கை மீது அபகீர்த்தி
ஏற்படுத்தாதே…”
“எங்கள் நாட்டின் நற்பெயரைக்
கொடுக்காதே…”
“ஊடக சுதந்திரத்தை கேலியாக்காதே…”
“சனல்௪ இத்தோடு உனது கேவலங்களை
நிறுத்து…”
“சனல்௪ போலி நாடகம்…” போன்ற சுலோகங்களை ஊடகவியலாளர்கள் ஏந்தி நின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply