இலங்கைத் தமிழர் பிரச்சினையை திசைதிருப்பம் மத்திய அரச: நெடுமாறன்
பாராளுமன்றத்தின் மழைகாலக் கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை எழுப்பப்படும் என்பதால் எதிர்க்கட்சிகளை திசைதிருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் வந்துள்ள குழுவினருக்கு இந்திய பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டம் ஆரம்பிக்கும் வேளையில் இலங்கை பாராளுமன்றக் குழு வந்திருப்பது திட்டமிட்ட ஒன்றாகும். மழைக்காலக் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை உறுதியாக எழுப்பப்படும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சிகளைத் திசைத் திருப்புவதற்கே இந்திய அரசு, இலங்கைக் குழுவை இங்கு வரவழைத்திருக்கிறது. இதை நான் வன்மை யாகக் கண்டிக்கிறேன்.
தமிழக மக்களின் மன உணர்வுகளை மேலும் மேலும் அவமதிக்கும் வகையில் இந்திய அரசு இலங்கை அரசுடன் கைகோர்த்து நிற்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர் தலில் தமிழக மக்கள் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும் கூட இந்திய அரசு திருந்தவில்லை. தமிழக மக்கள் இந்த துரோகத்தை ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply