ஆப்கானில் ஹெலிகொப்டர் விபத்து: அமெரிக்க வீரர்கள் 31பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க சிறப்புப்படை வீரர்கள் 31 பேர் பலியாகியுள்ளனர். தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடக்கும் போரில் நேச நாட்டுப் படை வீரர்கள் ஒரே நாளில் இவ்வளவு அதிக அளவில் இறந்திருப்பது இதுதான் முதல் தடவை. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு தென் மேற்கு பகுதியில் உள்ள சயீத் அபட் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.

தலிபான்களுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் கூட்டுப்படைகள் ஈடுபட்டிருந்தன. அப்போது கூட்டுப்படை ஹெலிகொப்டரை நோக்கி தலிபான்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து படை வீரர்கள் திருப்பிச் சுட்டனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூட்டுப்படை வீரர்கள் சென்ற ஹெலிகொப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த அமெரிக்க சிறப்புப் படை வீரர்கள் 31 பேரும், ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் 7 பேரும் இறந்தனர். இச்சம்பவத்தில் மொத்தம் 38 பேர் பலியாகியுள்ளனர்.

இது ஆப்கான் அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேச நாட்டு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் இறந்த வீரர்களுக்கு அதிபர் ஹமித் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். தலிபான்களுக்கு எதிராக 2001ஆம் ஆண்டு துவங்கிய போரில் இச் சம்பவத்தில்தான் அதிக அளவில் படை வீரர்கள் இறந்துள்ளனர்.

இச் சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும், இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் அனுதாபச் செய்தியை ஹமித் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஆப்கன் படை வீரரர்கள் 7 பேரும் இறந்துள்ளனர். அவர்கள் ஆப்கன் சிறப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply