நாங்கள் எடுக்க வேண்டிய முடிவை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம்

நாங்கள் எடுக்க வேண்டிய முடிவை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம். அது குறித்து இப்போது பிரஸ்தாபிப்பதற்கு இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு காலக்கெடு வழங்கியுள்ளீர்களே. அரசு உங்கள் காலக்கெடுவை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டால் என்ன செய்வீர்கள் என்று இரா. சம்பந்தனிடம் வீரகேசரி வார வெளியீடு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையில் உள்ளதாக பிரஸ்தாபிக்கப்படுகின்றதே, இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று வினவியபோது, ஆட்சி அதிகார முறைமை, மத்திய  மாநில அரசுகளுக்கிடையிலான விடயதானங்கள்,  செயற்பாடுகள் மற்றும் வரி, நிதி அதிகாரங்கள் ஆகியவை குறித்த மூன்று விடயங்களை முன்வைத்திருக்கின்றோம்.

இதற்கான அரசின் பதிலை தொடர்ந்தே நாம் எமது நிலைப்பாடு குறித்து முடிவெடுப்போம் என்றார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றோம். அதற்கு மேல் இப்போது ஏதும் தெரிவிப்பதற்கில்லை. அரசின் பதில் கிடைத்ததும் எமது நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply