த.தே.கூட்டமைப்பு அரசுக்கு காலக்கெடு விதிக்கவில்லை: சுமந்திரன் எம்.பி
அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த் தைகளில் எந்தவிதமான நிபந்தனைகளையோ அல்லது காலக்கெடு வையோ விதிக்கவில்லை யென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அரசாங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளில் நாம் முன்வைத்தவிடயங்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறே கோரியுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், அரச பிரதிநிதிகளுடன் பத்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம். இவை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட போதும் அதன் பின்னர் ஏழு சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன. இருந்தபோதும், இதுவரை அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்த நிலையிலேயே, அரசாங்கத்தின் நிலைப்பாடு எழுத்து மூலம் தெளிவு படுத்தப்பட்ட பின்னர் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கான திகதியை தீர்மானிக்கலாம் என்று அறிவித்திருந்தோம். நாம் அரசாங்கத்துக்கு எந்தவிதமான காலக்கெடுவையோ அல்லது நிபந்தனையையோ முன்வைக்கவில்லை.
அதேநேரம், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான நழுவல் போக்கையும் கடைப்பிடிக்கவில்லை. அவ்வாறான தேவையொன்றும் எமக்கில்லை என பாராளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத் தூதுக்குழுவினர் தங்கள் நிலைப்பாட்டை உடனடியாகத் தெரிவிக்க முடியாதிரு ப்பதாக அறிவித்துள்ளனர். அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னரே இது பற்றிய தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியுமென்றும் அரசாங்கத் தரப்பினர் அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதில் அரசாங்கம் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply